search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடைத்தாள் திருத்தும்"

    தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,300 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,300 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. தேர்வு முடிந்ததை தொடர்ந்து விடைத்தாள்கள் அனைத்தும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்துவதற்கு தேனி, சின்னமனூர் ஆகிய 2 இடங்களிலும், பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு தேனி, கம்பம் ஆகிய 2 இடங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

    தேனி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 1,300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தம் செய்தல், மதிப்பெண் சரிபார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டு மதிப்பெண் விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற–வுடன் 10-ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வருகிற 17-ம் தேதியும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 23-ம் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
    ×