search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானிகள் சாதனை"

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடிநீரில் உள்ள ஆர்சனிக் விஷத்தன்மையை நீக்கும் புதிய கருவியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனைப்படைத்துள்ளனர். #arsenic #IISER
    கொல்கத்தா:
                        
    ஆர்சனிக் என்பது வேதியியல் பண்பு கொண்ட தனிமமாகும். இது பொதுவாக நச்சுத்தன்மை கொண்டதாக காணப்படுகிறது. ஆனால், சில வகை பாக்டீரியாக்கள் ஆர்சனிக் சேர்மங்களை வளர்சிதை மாற்ற சுவாசத்திற்குப் ஆர்சனிக்கை பயன்படுத்துகின்றன. எலிகள், வெள்ளை எலிகள், ஆடுகள், கோழிகள் மற்றும் சில இனங்களுக்கு ஆர்சனிக் உணவுக் கூட்டுப்பொருளாக அவசியம் தேவைப்படுகிறது.

    இருப்பினும் தேவைக்கு அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது ஆர்சனிக்கு ஒரு நஞ்சாக பாதிப்புகளை உண்டாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நிலத்தடி நீரில் கலக்கும் ஆர்சனிக்கால் பெரும் இடர்பாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.



    இந்நிலையில், நீரில் உள்ள ஆர்சனிக்கை நீக்கும் புதிய கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய கருவியை உருவாக்கியுள்ளது. ஆர்சனிக் சென்சார் மற்றும் ரிமூவர் மீடியா என்ற இந்த கருவி நீரில் ஆர்சனில் உள்ளதா என்பதை கண்டறியும். ஆர்சனிக் இருந்தால் அதனை நீக்கி நீரை பாதுகாப்பானதாக மாற்றும்.

    கருவில் உள்ள சென்சாரை ஆர்சனிக் உள்ள நீர் மீது காட்டும் போது அதன் நிறம் மாறுபடும். பின்னர் அதிலுள்ள ஆர்சனிக்கின் அளவு கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நீக்கும் பணி தொடரும். இதன் மூலம் ஆர்சனிக் இல்லாத பாதுகாப்பான நீரை உருவாக்க முடியும்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரானது ஆர்சனிக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் அம்மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவு பயன்பெறுவர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். #arsenic  #IISER

    ×