search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கத்திக்குத்து"

    • ஆற்றூர் குட்டக்குழி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • ஸ்டான்லி விஜயகுமார், பிளஸ்சி பென்னியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    திருவட்டார்:

    ஆற்றூர் குட்டக்குழி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் உண்ணாமலை கடை பயணம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்சி பென்னி (வயது 39) என்பவர் நேற்று இரவு மது அருந்தி கொண்டிருந்தார். அதே மதுபான கடையில் வேர்கிளம்பியை சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஸ்டான்லி விஜயகுமார் (52) என்பவரும் மது அருந்தினார்.

    அப்போது பிளஸ்சி பென்னிக்கும், ஸ்டான்லி விஜயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த ஸ்டான்லி விஜயகுமார், பிளஸ்சி பென்னியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதையடுத்து பிளஸ்சி பென்னி தனது நண்பர் மதி அரசனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். இதையடுத்து மதி அரசன் மதுபான கடைக்கு விரைந்து வந்தார். அப்போது அங்கிருந்த ஸ்டான்லி விஜயகுமாரிடம் இந்த பிரச்சனை தொடர்பாக தட்டி கேட்டார்.

    அப்போது பிளஸ்சி பென்னி, மதி அரசன், ஸ்டான்லி விஜயகுமார் ஆகிய 3 பேரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டான்லி விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதி அரசனை சரமாரியாக குத்தினார். சுமார் பத்து இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதை தடுக்க வந்த பிளஸ்சி பென்னிக்கும் கத்திகுத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதி அரசன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டான்லி விஜயகுமார் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ஸ்டான்லி விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மதி அரசன், பிளஸ்சி பென்னி ஆகிய இருவர் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மதி அரசன் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார்.

    தற்பொழுது மருத்துவ விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×