search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரிசு வேலை"

    பணியில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு வாரிசு வேலை மற்றும் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க நடுவர் மன்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை அரசு பொதுப்பணித்துறையின் சுகாதார கோட்ட குடிநீர் வழங்கல் பிரிவில் மஸ்தூராக பணிசெய்தவர் ஜெகதீசன் (வயது 50). இவரும், உதயகுமார் (52) என்பவரும் சுதந்திர பொன்விழா நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி கடந்த 22.6.2012-ல் எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்தனர்.

    அப்போது வி‌ஷவாயு தாக்கி 2 பேரும் மரணமடைந்தனர். அவர்கள் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாரிசு வேலை தரப்படவில்லை.

    ஆபத்தான பணிகளில் மரணமடையும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி இந்த நிதியையும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை. பல முறை மனு அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமானுஜம், மாதவன் ஆகியோர் கொண்ட அமர்வு, குடும்பத்தினருக்கு வாரிசு பணியும், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி ரூ.10 லட்சமும் வழங்க தீர்ப்பளித்து ஆணை பிறப்பித்துள்ளனர்.

    தீர்ப்பின் நகலை தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், தலைமை என்ஜினீயர் ஆகியோருக்கு குடும்பத்தினர் அனுப்பி உள்ளனர்.

    கணவரை இழந்து வாடும் 2 குடும்பத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினை வாரிசுபணி, ரூ.10 லட்சம் நிவாரணத்தை 3 மாதத்தில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ஜெகதீசன் மனைவி மச்சகாந்தி, மகள் கீர்த்தனா, உதயகுமார் மனைவி மலர்க்கொடி ஆகியோரும் உடனிருந்தனர். #tamilnews
    ×