search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ் அப் மூலம் புகார்கள்"

    • அபராதம் விதிப்பு.
    • பொருட்கள் இருப்பை ஆய்வு செய்தார்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் 53 முழு நேர ரேசன் கடைகளும், 47 பகுதி நேர கடைகளும் உள்ளன.

    இந்த ரேசன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக டிஆர்ஓ குமரேஷ்வரன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார்கள் சென்றது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக பனப்பாக்கம், நல்லூர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது சர்க்கரை இருப்பை அளந்து பார்க்கும் போது அளவு குறைவாக இருந்துள்ளது.உடனடியாக பனப்பாக்கம் மற்றும் நல்லூர் பேட்டை ரேசன் கடையில் பணியாற்றும் 3 சேல்ஸ் மேன்களை கடுமையாக எச்சரித்து அபராதம் விதித்தார். இதேபோல தொடர்ந்து செயல் பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுவளையம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பணிபுரிந்து வந்த பாலசுந்தரம் என்பவர் பயோமெட்ரிக் கைரேகை முறையில் பொருட்களை வழங்காததால் வேலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவரை சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று ஆயர்பாடி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் டிஆர்ஓ குமரேஷ்வரன் திடீர் ஆய்வு செய்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார்.

    ×