search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்"

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப பள்ளி, ஆர்.சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முரளிதரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு, அதாவது 1.1.2005-க்கு முன்னர் பிறந்த தகுதியுடைய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 9-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    தேனி மாவட்டத்திலுள்ள 536 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 26 மற்றும் 27-ந்தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளது என்றார்.

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதையொட்டி கலெக்டர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். கம்பம் மெட்டு சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்புகுழுவினர்கள் மூலம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு மரங்கள் அகற்றப்பட்டது. குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    ×