search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு"

    • தமிழக நெடுஞ்சாலைத்து றையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தங்களது பணியை முழுமையாக முடித்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தருமபுரி - அதியமான்கோட்டை ரெயில்வே கேட்டில், காலை நேரத்தில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி சரியான நேரத்திகு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை.

    மேலும் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்தில் சிக்கியவர்களை, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், மேல்சிகிச்சைக்கு சேலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் போதும் அதியமான்கோட்டை ரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க அதியமான்கோட்டை ரெயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு அதியமான்கோட்டை ரெயில்வே கிராசிங்கில் ₹.9 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு தண்டவாளத்தின் இருபுறமும் கட்டுமானப்பணிகள் முடிந்தது.

    தமிழக நெடுஞ்சாலைத்து றையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தங்களது பணியை முழுமையாக முடித்தனர். ஆனால்,ரெயில்வே நிர்வாகத்தினர் மேம்பாலத்தில் தங்களது பணியை முடிக்க காலதாமதம் செய்து வந்தனர். இதனால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்தனர்.

    இப்பணியை விரைந்து முடிக்க தொடர்ந்து கோரிக்கை எழுந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன், ரெயில்வே நிர்வாகத்தினர், மேம்பாலத்தில் தங்களது பகுதியில் கிடப்பில் இருந்த பகுதிகளில் பாலம் அமைக்கும் பணியை தொடங்கினர். இதில், அனைத்து பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரெயில்வே மேம்பாலம் தயார் நிலையில் உள்ளது.

    2 வருடத்திற்கு மேலாக கலெக்டர் பங்களா வழியாக ரெயில்கள் வரும் போதெல்லாம் ரெயில்வே கிராசிங்கை பொறுமையுடன் காத்திருந்து சிரமத்துடன் இன்று வரை கடந்து செல்லும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பணி முடிந்து தயார் நிலையில் உள்ள அதியமான் கோட்டை ரெயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×