search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சித் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு"

    • ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, நாகலாபுரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஓடையில் நீர்செறிவூட்டு குழி அமைத்தல் மற்றும் வாய்கால் சீரமைக்கும் பணி, தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை,

    15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.01 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் புனரமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.84 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய பேவர்பிளாக் கற்கள் சாலை அமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேசன் விலைக்கடை கட்டுமானப்பணி,

    நாகலாபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணி,

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமா னப்பணி, தாடிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வர்ணம் பூசும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.88 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கல் மற்றும் கம்பி வேலி அமைக்கப்பட்டு வரும் பணி,

    தப்புக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரணியில் படித்துறை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மற்றும் பராமறிப்பு பணி, மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் புனரமைப்பு பணி,

    தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேக்கரி மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அலகு சுற்றுச்சுவர் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.94.43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.

    ×