search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி முகமை"

    • தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி முகமை மூலம் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • சட்டமன்ற தேர்தலின்போது மலைவாழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியானது இந்த பாலம் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    பேச்சிப்பாறை ஊரா ட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கிளவியாறு. மழை காலங்களில் இந்த ஆற்றை கடந்து செல்வதற்கு மலைவாழ் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த மழை காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்கள்.

    இந்த பகுதியில் பாலம் கட்டவேண்டும் என்று மலைவாழ் மக்கள் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்க ராஜிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி முகமை மூலம் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ. 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, பணியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் யசோதா, கீதா, மாவட்ட அரசு வக்கீல் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலா வுதின்,

    மாவட்ட கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம்.ஆர், பேரூர் செயலாளர்கள் ஜாண் எபனேசர், சேம் பெனட் சதீஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினித் ஜெரால்ட், மாவட்ட பிரதிநிதி பொன்.ஜேம்ஸ், தி.மு.க. உறுப்பினர் வெண்டலி கோடு சூர்யகுமார், அரசு ஒப்பந்தகாரர் பென்ராஜாசிங் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.பால பணியை தொடங்கிவைத்து அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:-

    சட்டமன்ற தேர்தலின்போது மலைவாழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியானது இந்த பாலம் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ 2.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மலைவாழ் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.

    ×