search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாற்று சிறப்பு"

    • காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
    • கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.

    சி.எம்.டி.ஏ. எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின், சென்னை பெருநகர எல்லையானது ஏற்கெனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என 5,904 சதுர கி.மீ. அளவுக்கு சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு, புதிய நகர் வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    அடுத்த கட்டமாக, காஞ்சிபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை புதுப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 98.92 சதுர கி.மீ. பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, கலந்தாலோசகரை நியமிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. அதற்கான கலந்தாலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது.

    ×