search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதானவர்கள்"

    • மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா 260 பேருக்கு ரூ.19. 89 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுபயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் 50 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் இலவச வீட்டுமனைப்பட்டா 31 பேருக்கும் ரேசன் கார்டு 20 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3பேருக்குஅரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 260 பேருக்கு ரூ.19 லட்சத்து 89 ஆயிரத்து290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் மேல்மலையனூர் யூனியன் தலைவர் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் தாசில்தார் கோவர்தனன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், ஜமாபந்தி கண்காணிப்பு அலுவலர் உஷா, யூனியன் துணைத்தலைவர் விஜயலட்சுமி முருகன் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதை சந்திரகுப்தன்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×