search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில வாலிபர் கொலை"

    திருப்பூரில் வட மாநில வாலிபர் கொலையில் கோவை சின்ன கவுண்டன் புதூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் மாஞ்சில் (24). இவர் திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர்களுடன் மங்கலம் பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்தார். இரவு வஞ்சிப்பாளையம் திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள கவுசிகா நதி பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரமோத் மாஞ்சிலை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் பிரமோத் மாஞ்சிலை கத்தியால் குத்தினார்கள்.

    பின்னர் பாலத்தில் இருந்து தள்ளி விட்டு பிரமோத் மாஞ்சில் வைத்திருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். பாலத்தில் இருந்த தள்ளியதில் பிரமோத் மாஞ்சில் இறந்தார்.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிரமோத் மாஞ்சில் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சென்றனர். அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.

    அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து அவர்கள் யார்? என விசாரித்தனர். விசாரணையில் பிரமோத் மாஞ்சிலை கொன்று பணத்தை பறித்து சென்றது தேனி மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்த விஜய ராகவன் (23), ஸ்ரீதர் (23) என்பது தெரிய வந்தது.

    அவர்கள் கோவை சின்ன கவுண்டன் புதூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் நண்பர்களை பார்க்க வந்தோம். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினோம். பின்னர் கோவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றோம்.செலவுக்கு பணம் இல்லாததால் யாரிடமாவது பணம் பறிக்கலாம் என நினைத்து சென்று கொண்டிருந்தோம். அப்போது தான் பிரமோத் மாஞ்சில் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றோம். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்தி பணத்தை பறித்து பாலத்தில் இருந்து வீசினோம். இதில் அவர் இறந்து விட்டார் என கூறி உள்ளனர்.

    ×