search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோயர்கேம்பில் நீரேற்று நிலையம்"

    • லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
    • தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    மதுரை மாநகராட்சி பகுதிக்கு தினசரி 125 மி.கனஅடி நீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீரேற்றுநிலையம் மற்றும் பெரியாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன.

    25 மீட்டர் நீளம், அகலம் மற்றும் 22 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் முல்ைலபெரியாற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

    தடுப்பணையில் இருந்து தலைமை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கிருந்து குழாய்மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் முக்கிய பணியான தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி பெரும் சவாலாக இருந்தது. ெதாடர் முயற்சி காரணமாக இந்த பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றனர்.

    ×