search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோந்து வாகனம்"

    • இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கான திட்டம் அறிமுகம்.
    • அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என அறிவிப்பு.

    தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.

    அதாவது, இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்கள் 1091, 112, 044-2345 2365, 044- 28447701 ஆகிய உதவி எண்களை அழைக்கலாம்.

    ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவை இலவசம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

    • வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது.
    • ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும்.

    சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீஸார் ரோந்து வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதற்காக சென்னை மாநகர காவல்துறையில் 320 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தலா ஒரு கேமராக்கள் என வாகனத்துக்கு வெளியே 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது. இந்த கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்கவும், பணியில் உள்ள காவலர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் முடியும்.

    இதன் பயன்பாடு என்ன என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும் என்றனர்.

    குற்றச்செயல்களை தடுக்க சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மட்டுமே தற்போது கைகொடுத்து வருகின்றன. ஆனால் பல நேரங்களில் இந்த கேமராக்கள் செயல்படாமல் போய்விடுகின்றன.

    இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், குற்றசெயல்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை கண்டுபிடிப்பதும் சிரமமான காரியமாகி விடுகிறது. ஆனால் ரோந்து வாகனங்களில் பொறுத்தப்படும் கேமராக்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும். இதற்கான கட்டுப்பட்டு அறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும். அங்கிருந்தபடியே கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்கமுடியும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி வாகனத்தின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்ட்டுள்ள கண்கானிப்பு கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்பது இந்த கேமராக்களின் சிறப்பாக இருக்கும் நிலையில் வாகனத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலமாக போலீசார் என்ன செய்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்யலாம். இதன் மூலம் அவர்கள் வாகனத்தின் உள்ளே வைத்து தவறு ஏதும் செய்கிறார்களா? என்பதும் தெரிய வந்துவிடும்.

    இதனால் போலீசார் தப்பு செய்யாமல் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ரோந்து வாகனங்களில் கேமராக்களை பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ×