search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபிஸ் நோய்"

    • பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைக்க வேண்டும்.
    • உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியின் சார்பில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி முன்னிலையில் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அப்போது ஆணையாளர் எஸ்.வெங்கடேசன் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போடுதல் வேண்டும்.

    வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது தெரு நாய் கடித்தாலோ கீறினாலோ உடனடியாக கடித்த இடத்தில் சோப்பினால் கழுவி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் படி தடுப்பூசிகளை முழுமையாக போட்டு கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் பற்றிய தகவல்களை எடுத்துரைப்பதன் மூலம் நோயால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறினார்.

    ×