search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் திட்ட பணி"

    • மாநாட்டில் ஒகேனக்கல் குடிநீர் மாவட்டம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • தருமபுரியில் சிப்காட் பணிகளை விரைந்து செயல்படுத்தி படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கவேண்டும்.

    தருமபுரி,

    சி.ஐ.டி.யூ. தருமபுரி மாவட்ட 12-வது பொதுமாநாடு தருமபுரி உள்ள பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொது மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன்‌ தீர்மானத்தை வாசித்தார். மாநில செயலாளர் முத்துகுமார் பொதுமாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் நாகராசன் வேலை குறித்து அறிக்கை வாசித்தார். பொருளாளர் தெய்வானை வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் கலாவதி அங்கம்மாள், முரளி, ரகுபதி, சண்முகம், செல்வம், ஜெயக்குமார், ஈஸ்வரி, லில்லிபுஷ்பம், லெனின்மகேந்திரன் சண்முகம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில துணைத்தலைவர் சந்திரன் நிறைவுறையாற்றினார்.

    முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் சி.ஐ.டி.யூ. கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

    மாநாட்டில் ஒகேனக்கல் குடிநீர் மாவட்டம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தருமபுரியில் சிப்காட் பணிகளை விரைந்து செயல்படுத்தி படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கவேண்டும். மொரப்பூர் - தருமபுரி ரெயில் திட்ட பணியை உடனே தொடங்க வேண்டும்.

    ஒகேனக்கல் சுற்றுலாதளத்தில் ஒகேனக்கல் ஊட்டமலை, கோத்திக்கல், மாமரத்துப்பள்ளம் ஆகிய இடங்களில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தெய்வானை நன்றி கூறினார்.

    ×