search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60 பவுன் நகை கொள்ளை"

    உலகிலேயே அதிக எடை கொண்ட டெல்லி சிறுவனுக்கு, ஆபரேசன் மற்றும் தொடர் சிகிச்சை காரணமாக 3 மாதத்தில் 60 கிலோ எடை குறைந்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி மேற்கு பகுதியில் உள்ள உத்தர்நகரில் வசிக்கும் பூஜா ஜெயின் என்பவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு மிகிர் ஜெயின் என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர்.

    பிறக்கும் போது மிகிர் ஜெயின் சுமார் 2.5 கிலோ எடையே இருந்தான். ஆனால் மாதங்கள் செல்ல செல்ல... மிகிர் ஜெயினின் உடல் எடை கணிசமாக அதிகரித்தது.

    தங்களது முன்னோர்கள் அனைவரும் குண்டாக இருப்பதால், தனது மகனும் குண்டாக வளர்வதாக முதலில் பூஜா நினைத்தார். ஆனால் மிகிரின் ஒரு வயதுக்குப் பிறகு அவனது உடல் எடை பிரமிப்பூட்டும் வகையில் அதிகரித்தது.

    மிகிர் 5 வயதை எட்டிய போது அவனது உடல் எடை 70 கிலோவை தொட்டு விட்டது. அனைவரும் மிகிர் ஜெயினை ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினார்கள்.

    மிகிரை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தபோது மற்ற மாணவர்கள் அவனை சற்று மிரட்சியுடன் பார்த்தனர். 2009-ல் அவன் இரண்டாம் வகுப்புக்கு சென்றபோது அவனது உடல் எடை 100 கிலோவைத் தாண்டி விட்டது.

    அவனைப் பார்த்த அனைவரும் “குண்டு பையன்” என்று கேலியும் கிண்டலும் செய்தனர். என்றாலும் சராசரி மனித உடலையும் தாண்டிய நிலையில் மிகிர் கஷ்டப்பட்டு இரண்டாம் வகுப்புக்கு சென்று வந்தான்.

    இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவன் உடல் எடை 125 கிலோவாக உயர்ந்தது. அவனால் 2 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவன் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினான்.

    அவனுக்கு தாய் பூஜா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுத்தார். அதோடு மகனின் உடல் எடையை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.


    2010-ம் ஆண்டு முதன் முதலாக மிகிர்ஜெயினை டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பார்த்த டாக்டர் பிரதீப் கடும் அதிர்ச்சி அடைந்தார். உலக அளவில் குண்டாக இருக்கும் சிறுவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்தார்.

    அப்போது மிகிர் 7 வயதில் 150 கிலோ எடையுடன் உலகிலேயே மிக, மிக அதிக உடல் எடை கொண்டவராக முதல் இடத்தில் இருப்பது தெரிய வந்தது. அவரது உடல் எடை சாதனை பட்டியலிலும் இடம் பிடித்தது.

    இதற்கிடையே அவனது உயரமும் அதிகரித்தது. இதையடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சிறு வயது என்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 14-வது வயதை பூர்த்தி செய்த மிகிர்ஜெயின் 5 அடி 3 இஞ்ச் உயரத்துக்கு வளர்ந்திருந்தான். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவனது உடல் எடை 237 கிலோவுக்கு உயர்ந்திருந்தது. இனியும் விட்டால் 300 கிலோவுக்கு போய் விடுவான் என்று டாக்டர்கள் பயப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து மிகிருக்கு கடந்த ஏப்ரல் மாதம் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பயனாக அவனது உடல் எடை கட்டுப்பட்டது. அதோடு உடல் எடையும் குறைந்தது.

    மிக குறுகிய காலத்துக்குள் அவனது உடல் எடையில் 60 கிலோ குறைந்துள்ளது. தற்போது மிகிர் ஜெயின் 177 கிலோ உடல் எடையுடன் இருக்கிறான்.

    கொஞ்சம், கொஞ்சமாக அவனது உடல் எடையை குறைத்து விட முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மிகிரின் உடல் எடையை 100 கிலோ குறைத்து 77 கிலோவுக்கு கொண்டு வந்து விட டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். #WorldsFattestBoy #Obesity #WeightLoss
    2017-18 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். #TNtextbooks #schoolbooks
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.

    2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

    திருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார். #TNtextbooks #schoolbooks
    ×