search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை ஊர்வலம்"

    • வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது
    • மாலைமலர் செய்தி எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெற்று வரு கின்றன.

    இந்த விழா காலங்களில் 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக புனித நீர், விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து வெள்ளிக்குடத்தில்எடுத்துநெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த வைகாசி விசாக திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்பட வில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    வைகாசி விசாக விழா வின் 10 -ம் நாள் நடந்த தேரோட்டத்தின் போது தேர் தடி எடுத்து போடு வதற்கு கூட யானை பயன்படுத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மன வேத னைைய ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிலாவது யானையை பங்கேற்க செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றிய செய்தி மாலைமலரில் சமீபத்தில் வெளியானது.

    இதன் எதிரொலியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொ ண்டது. இதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவுக்கு யானை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

    நெல்லையில் இருந்து யானை வரவழைக்கப்பட்ட உள்ளது. இதற்காக வனத்து றையினரிடமும் அனுமதி பெறப்பட்டு உள்ளது.

    ×