search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தூர்"

    தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 2.40 டன் வரத்து இருந்தது.
    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.40 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது. முத்தூர்சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். 4,567 தேங்காய்கள் வரத்து இருந்தது.

    எடை 1,635 கிலோ. கிலோ ரூ.26.65 முதல் ரூ.29.40 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.28.10. விற்பனைத் தொகை ரூ.45 ஆயிரத்து 254. கொப்பரை 20 மூட்டைகள் வரத்து இருந்தது. எடை 735 கிலோ. விலை கிலோ ரூ.76.70 முதல் ரூ.105.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.103.70. விற்பனைத்தொகை ரூ.64 ஆயிரத்து 372.

    31 விவசாயிகள், 10 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 2.40 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
    ×