search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி"

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
    • முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

    சேலம்:

    முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை யொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் எழுத்தாளர் கலைஞர் குழு சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர்– அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு கடந்த 4-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் இத்தேர் காட்சிப்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து இன்று சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து அலங்கார ஊர்தியில் உள்ள கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைஞரின் உருவம் பொறித்த பேனாக்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக முத்தமிழ்த்தேர் உருவாக்கப்பட்ட விதம் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோ படக்காட்சி ஒளிபரப்பப் பட்டதை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் பொறுப்பு சுகந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×