search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முண்டு மிளகாய்"

    • பாரம்பரியமிக்க முண்டு மிளகாய்க்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • இது ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரம்பரியமிக்க பொருட்களின் சிறப்புக்கு ஏற்ப புவிசாா் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டு இருந்தது. இந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகு ளத்தூா், பரமக்குடி, நயினாா் கோவில், ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய், வேலூா் மாவட்டத்தில் விளையும் முள்கத்தரிக்காய் ஆகியவற்றுக்கு புவிசாா் குறியீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழ்நாடு மொத்தம் 45 பொருட்களுக்கு புவிசாா் குறியீடு பெற்று, இந்திய அளவில் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. 200 ஆண்டுகளாக ராமநாதபுரம் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் குண்டு மிளகாய்க்கு அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    இங்கு விளையும் குண்டு மிளகாயை விவசாயிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி, கத்தாா், ஓமன், துபாய், சவூதி அரேபியா, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனா். இது ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கொண்டது.
    • ராமநாதபுரம் முண்டு மிளகாய் வர்த்தக சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முண்டு மிளகாய் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதற்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த முண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இதன் மகத்துவம் உணர்ந்து ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்க தலைவர் மங்களசாமி கூறி யதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் 'முண்டு மிளகாய்' ரகமும் ஒன்று என்பதால், அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று ராமநா தபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரப் பிரசாதம்.

    இதன் மூலம் முண்டு மிளகாய் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×