search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன் கோவில்"

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று தொடங்கியது.
    • 25-ந்தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நேற்று (12-ந் தேதி) வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிரியா விடையுடன் சுந்தரேசுவர ரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அவர்க ளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர்.

    30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு ஆவணி மூல திருவிழா சிறப்பாக நடை பெற உள்ளது. இந்த நாட்களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர் கள் சார்பாகவோ தங்க கவசம், வைர கிரீடம், உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா சேவைகள் நடத்தப் படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை 2 வேளைகளிலும் 4 ஆவணி மூல வீதிகளிலும் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக ளுடன் வீதிஉலா வந்து மண்டகப்படிகளில் எழுந்த ருளி பின்பு கோவிலை வந்தடைவர்.

    இன்று முதல் 18-ந்தேதி வரை சந்திரசேகர் உற்சவம், 2-ம் பிரகாரம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 19-ந்தேதி ஆவணி மூல திருவிழா முதல் நாள் உற்சவத்தில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளை யாடல் நடைபெறும்.

    தொடர்ந்து 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அருளியது, 23-ந்தேதி உலவாக் கோட்டை அருளியது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 25-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி யும், இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபி ஷேகமும் நடைபெறும். 26-ந்தேதி நரியை பரியாக்கியது, குதிரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 28-ந்தேதி விறகு விற்றல் ஆகிய திருவிளை யாடல் நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையா டல் நிகழ்ச்சியில் அதிகாலை யில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவாதவூர் மாணிக்கவாசக ரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளுவர்.

    அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப் படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபுரம் வழி யாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடுவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா 13-ந்தேதி தொடங்குகிறது.
    • சுவாமியும், அம்மனும் பிட்டு தோப்புக்கு செல்வர்.

    மதுரை

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா வருகிற 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ெயாட்டி 12 நாட்களுக்கு 12 திருவிளையாடல் நிகழ்ச்சி கள் நடைபெறும்.

    19-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், 20-ந் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந் தேதி தருமிக்கு பொற்கிழி வழங்கியது, 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளி யது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, 26-ந்தேதி நரியை பரி யாக்கிய லீலை, 28-ந் தேதி விறகு விற்ற லீலை நடைபெறும்.

    24-ந்தேதி இரவு சுந்தரே சுவரர் பட்டாபிஷேகம் நடைபெறும். சுந்தரேசு வரரிடம் செங்கோல் வழங்கப்பட்டு சுவாமியும், அம்மனும் பிரகாரத்தில் வலம் வருவர். 27-ந்தேதி பிட்டுத்திருவிழா நடை பெறும்.

    திருவிழா நாட்களில் 4 ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருவார்கள்.

    29-ந்தேதி சட்டத் தேரில் சுவாமி-அம்மன் எழுந்த ருள்வர். அன்று இரவு சப்தவர்ண சப்பர உலா நடைபெறும். 30-ந் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தாரியுடன் தீர்த்தவாரி நடைபெறும். சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வர். அத்துடன் திருவிழா நிறைவடையும்.

    ×