search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிஸ்டு கால்"

    • கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிஸ்டு கால்’ மூலம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ மாணவி பழக்கமானார்
    • காதலனை மறக்க முடியாத அவர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருேக உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த 27 வயது பொறியல் பட்டதாரி வாலிபர், கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணி செய்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 'மிஸ்டு கால்' மூலம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ மாணவி பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு ஜோடியாக சென்று தங்களது காதலை வளர்த்தனர்.

    இந்த காதல் விவகாரம் தெரிய வந்ததும் இருவரின் வீட்டினரும் கண்டித்தனர். ஆனால் காதல் ஜோடி அதனை கேட்கவில்லை. இதற்கிடையில் மாணவி படிப்பை முடித்து டாக்டர் ஆகி விட்டார். அப்போதும் அவர் காதலில் உறுதியாக இருந்ததால் வேறு வழி யின்றி அவர்களுக்கு திரு மணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்த னர்.

    வருகிற 12-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இரு வீட்டாரும் திருமண வேலைகளில் ஈடுபட்டனர். மணமகனுக்கு வரதட்சணையாக கார், நகை மற்றும் ரொக்கம் முடிவு செய்யப்பட்டு, நிச்சயமும் நடந்தது.மணமகன் வீட்டாருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கமும் கொடுக்கப்ப ட்டது.

    தொடர்ந்து திருமண மண்டபம் புக் செய்யப்பட்டு பத்திரிகை அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். காதலனை கைபிடிக்கும் மகிழ்ச்சியில் பெண் டாக்டரும் இருந்தார்.

    இதில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. திடீரென கடந்த 3- வாரங்களுக்கு முன்பு இரு வீட்டாருக்கும் ஏதோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார், இந்தப் பெண் எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி திருமணத்தை நிறுத்தினர். அவர்களை சமரசம் செய்ய பெண் வீட்டார் எடுத்த முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை வேறு வழியின்றி களியக்காவிளை போலீஸ் உதவியுடன் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக்கொண்டார். மேலும் இனி இரு வீட்டா ருக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த சம்பவங்களால் பெண் டாக்டர் மிகவும் மன வேதனை அடைந்தார்.காதலனை மறக்க முடியாத அவர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகள் எங்கு சென்றார் என தேடி னர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இந்த நிலையில் பெண் டாக்டர் நேற்று மாலை வக்கீல் ஒருவருடன் தனது காதலன் வீட்டு முன்பு வந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வரதட்சனை அதிகம் கேட்டு என்னை கைவிட்டு விடாதீர்கள். நான் உங்களை அதிகமாக காதலித்து வருகிறேன் என கூறி கண்ணீர் விட்டு அவர் அழுதது அங்கு வந்திருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு களியக்காவிளை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இரு வீட்டாரும் சேர்ந்து திரு மணம் வேண்டாம் என எழுதிய உடன்படிக்கை பத்திரத்தை வக்கீல் மற்றும் அங்கு கூடியிருந்த பொது மக்களிடமும் காட்டினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நீ ஒரு மருத்துவர், உனக்கு நல்ல வரன் கிடைக்கும். இப்படி வரதட்சணை கேட்டு இப்பொழுதே கொடுமை படுத்து ேவார்களுடன் வாழ முடியாது என கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் டாக்டர் கண்ணீர் விட்டு அழுதபடி வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    மேலும் இச்சம்பவம் குறித்து பெண் டாக்டரின் பெற்றோருக்கு களியக்கா விளை போலீசார் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    ×