search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிருதங்க கச்சேரி"

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • கவர்னர் வருகை தரும் இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தப் பேரி கிராமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஷோகோ கார்ப்பரேஷனின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    நாளை (18-ந் தேதி) தூத்துக்குடி வருகை தர உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர் தனது நண்பரான ஸ்ரீதர் வேம்புவுடன் கலந்துரையாடுகிறார்.

    மேலும் அருகிலுள்ள கிராமமான ராஜாங்க புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளார். அதனை தொடந்து அங்குள்ள பள்ளியை பார்வையிடும் கவர்னர் அதன்பின்னர் ராஜங்க புரத்தில் நடைபெறும் மிருதங்க கச்சேரியில் கலந்து கொள்கிறார்.

    இதனையடுத்து அந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மற்றும் கவர்னர் வரும் பாதைகளை பார்வையிடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

    மேலும் ஸ்ரீதர் வீட்டில் கவர்னர் வருகைதரும் இடங்களையும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தென்காசி மாவட்ட கோட்டாட்சியர் கங்காதேவி, தாசில்தார் அருணாச்சலம் , கடையம் ஆணையாளர் முருகையா, பஞ்சாயத்து தலைவர்கள் கோவிந்த பேரி டி.கே.பாண்டியன், மந்தியூர் கல்யாணசுந்தரம்,தென்காசி எஸ்.பி. எஸ்.ஐ. முத்து கணேஷ்,

    எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டு முருகன், ரவி, கிராம நிர்வாக அதிகாரி அண்ணாமலை, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார் ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நாளை கடையம் பகுதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வர உள்ளதால் அப்பகுதி மக்கள் பரவசத்தில் உள்ளனர்.

    ×