search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்டுகள்"

    ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள், 4 பேரின் உடல்களையும் மாட்டு கொட்டகையில் தொங்கவிட்டுள்ளனர்.
    கயா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டம், துமரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்து, சரயு சிங் போக்தா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்துள்ளனர்.  அப்போதும்,  ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள், 4 பேரின் உடல்களையும் மாட்டு கொட்டகையில் தொங்கவிட்டுள்ளனர். வீட்டை வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கி உள்ளனர். தாக்குதல் நடந்தபோது சரயு சிங் போக்தா வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினார்.

    மாவோயிஸ்டுகள் ஒரு துண்டு பிரசுரத்தை அந்த வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அதில், சரயு சிங் போக்தாவும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் இன்பார்மர்கள் என்று கூறியிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, மார்ச் மாதம் நடந்த என்கவுண்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    மார்டின்டோலா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஆண்ககள் 20 பேர், பெண்கள் 6 பேர் என 26 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது, கோர்சி பகுதியில் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

    நேற்று என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்கவுண்டர் குறித்து மகாராஷ்டி உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல், ‘‘என்கவுண்டரில் நக்சலைட் தலைவன் மிலிந்த் தெல்தும்டே சுட்டு வீழ்த்தப்பட்டார். இவன் தலைக்கு 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டவன்.

    மொத்தம் 26 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    26 மாவோயிஸ்டுகளில் 20 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இதில் தலைக்கு 16 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட மகேஷ் சிவாஜி என்பவரும் அடங்குவார். தலைக்கு 6 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நான்கு பேர் அடங்குவர்’’ என்றார்.
    மும்பையில் இருந்து 900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்சிரோலி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
    நாக்பூர்/மும்பை:

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது, கோர்சி பகுதியில் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

    காவல்துறை தரப்பில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள்  உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    இன்று என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அழைத்துச் செல்லப்பட்ட கிராம மக்களை மாவோயிஸ்டுகள் விடுவிக்கவேண்டும் என பழங்குடி சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பாதர் கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். காணாமல் போனவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் உள்ளது இந்த கிராமம். நேற்று மாலை இந்த கிராமத்திற்குள் புகுந்த மாவோயிஸ்டுகள், 5 பேரை கடத்திச் சென்றதாகவும், அவர்களில் ஒருவர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுக்மா  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார். 

    அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்ற தகவல் தெரியவில்லை. சில சமயம் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் செல்வதும் உண்டு. எனவே, அழைத்துச் செல்லப்பட்ட கிராமத்தவர்களை மாவோயிஸ்டுகள் விடுவிக்கவேண்டும் என பழங்குடி சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

    கடந்த ஜூலை மாதம் குண்டட் பகுதியில் இருந்து 8 பேரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், 3 நாட்களுக்குப் பிறகு விடுவித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

    ×