search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்டத்திற்கு"

    • விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்
    • 28-ந்தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

    நாகர்கோவில் : தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 28-ந்தேதி குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முன்னதாக அக்டோபர் 27-ந்தேதி மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவர் இரவு கன்னியாகுமரியில் ஓய்வெடுக்கிறார்.

    28-ந்தேதி காலை 9.30 மணிக்கு தக்கலை, அழகியமண்டபம் வழியாக வேர்க்கிளம்பி செல்லும் அவர் அங்கு நூலக திறப்பு விழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அழகிய மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கூட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதிய உணவு முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் அங்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலை 4.45 மணிக்கு குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதுரை சென்று இரவு 8 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    ×