search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா"

    • கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது.
    • 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பகுதியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் லதா சேகர், அ.ம.மு.க. கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அ.ம.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் ஊராட்சி மன்ற துணை தலைவருமான தமிழ்ச்செல்வன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, அ.ம.மு.க. ஆத்தூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகி பிரபாகரன் பா.ம.க. பிரமுகர் செல்வம், தி.மு.க. முன்னாள் கிளைச் செயலாளர் ஜனார்த்தனன் உள்பட 150 பேர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2 கோடியே 4 லட்சம் உறுப்பினர்கள்

    இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு சோதனை காலத்திலும் சிறப்பான ஆட்சித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

    அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி தந்துள்ளோம். ஆசியாவி லேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசலில் உருவாக்கித் தந்தோம். இதன்மூலம் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிகள் உலகளவில் சிறப்பு பெற்றுள்ளது.

    விவசாய மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்றி தந்தது அ.தி.மு.க. தான். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவாக இருந்ததால், யாருமே கோரிக்கை வைக்கப்படாத நிலையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்தோம்.

    இதன்மூலம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இந்த ஆண்டு ஏழை மாணவர்கள் 18 பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×