search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமாகும் குழந்தை"

    • பாதுகாப்பு படை அலுவலர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
    • குழந்தைளை தேடுபவர்கள் எளிதில் பார்வையிட்டு அடையாளம் காண முடியும் என்றார்.

    திருப்பூர் :

    மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு துறை, ரயில்வே துறையுடன் இணைந்து, கோயா பயா என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் காணாமல் போகும் மற்றும் மீட்கப்படும் குழந்தைகள் விபரங்களை indianrailways.gov.in மற்றும், khoya---paya.gov.in/mpp/home என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய ரயில்வே பாதுகாப்பு படைக்கு(ஆர்.பி.எப்.,) உத்தரவிடப்பட்டுள்ளது.

    இணையதளத்தில் பதிவு செய்யப்படும் காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையம், குழந்தைகள் நல இணைய தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு விபரங்கள் பயன் தருவதாக அமையும். இதுகுறித்து அனைத்து மண்டல தலைமையகங்களில் இருந்து ஆர்.பி.எப்., எஸ்.பி., - டி.எஸ்.பி., உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படை அலுவலர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) இன்ஸ்பெக்டர் முருகன் கூறுகையில், ரயில்வே நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்படும் சிறுவர், சிறுமிகளின் விபரத்தை http://indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்கிறோம். மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் போட்டோ, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இதில் தெரிவிக்கப்படும். குழந்தைளை தேடுபவர்கள் எளிதில் பார்வையிட்டு குழந்தைகளை அடையாளம் காண முடியும் என்றார்.

    ×