search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பலி"

    • ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது.
    • தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இ

    வானூர்:

    கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் மிதுன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மகா விஷ்ணு (20). இவர்கள் 2 பேரும் வேலாண்டி பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர்.

    நேற்று கல்லூரி மாணவர்கள் 15 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் கோட்டக்குப்பம் அருகே பெரிய முதலியார் சாடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதியம் பெரிய முதலியார் சாவடியில் உள்ள கடற்கரையில் குளித்தனர்.

    அப்போது ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது. அதிர்ச்சியடைந்த 2 பேரும் அபய குரலிட்டனர். உடனடியாக மற்றவர்கள் 2 பேரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடன் இணைந்து கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.

    இன்று காலை தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது கடலில் மூழ்கிய மாணவர்கள் மிதுன், மகா விஷ்ணு ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பெரியமுதலியார் சாவடி வந்தனர். இறந்துபோன தங்களது மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரமத்தில் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர்.
    • மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    திருப்பூர்-அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி ரிங்க்ரோடு பகுதியில் ஸ்ரீவிவேகானந்தர் குழந்தைகள் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆசிரமத்தில் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர்.

    இங்கு தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் ஆசிரம நிர்வாகத்தினரே செய்து கொடுக்கின்றனர். இங்கு தங்கி இருக்கும் மாணவர்கள் அனைவரும் அருகே உள்ள பள்ளிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

    தற்போது ஆயுத பூஜை விடுமுறை என்பதால் அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலோனார் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். 15 மாணவர்கள் மட்டுமே ஆசிரமத்தில் தங்கி இருந்தனர்.

    இன்று காலை 15 மாணவர்களையும் காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு அழைத்தனர். பின்னர் குழந்தைகள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

    அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆசிரமத்தில் விளையாடுவதற்கு சென்றனர். அப்போது ஒவ்வொரு மாணவராக, திடீர் திடீரென மயங்கி விழ தொடங்கினர்.

    இதனை பார்த்ததும், ஆசிரமத்தில் இருந்த பணியாளர்கள் பார்த்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆசிரம நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர்களும் விரைந்து வந்து மயங்கி விழுந்த குழந்தைகளை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு தங்கி இருந்த பாபு(வயது10), ஆத்திஸ்(8), மாதேஷ்(14) ஆகிய 3 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் திருமுருகன்பூண்டி போலீசார் ஆசிரமத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    மேலும் மயங்கிய 12 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் இது தொடர்பாக ஆசிரம நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • ரோட்டோரம் உள்ள தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு கார் தோட்டத்துக்குள் புகுந்தது.
    • ரோஷன் கார் ஓட்டி வந்ததால் அவர் மட்டும் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி நவாவூர் பிரிவைச் சேர்ந்தவர் விக்னேஸ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவரும், இவரது நண்பர்களும் கோவை சிறுவாணி சாலை பூலுவப்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டா டினர்.

    ஆதர்ஸ் அழைப்பை ஏற்று அவரது நண்பர்களான வடவள்ளி எஸ்.வி. நகரைச் சேர்ந்த ரோஷன் (19) மற்றும் ரவிகிருஷ்ணன் (18), நந்தனன் (18) ஆகியோரும் ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இவர்களும் கல்லூரி மாணவர்கள். இரவில் அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

    இன்று கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் அதிகாலையே ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார்கள். ஆதர்ஸ், ரோஷன், ரவி, நந்தனன் ஆகிய 4 பேரும் ஒரு காரில் வடவள்ளிக்கு புறப்பட்டனர். காரை ரோஷன் ஓட்டி வந்தார்.

    கார் வேகமாக வடவள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில் அருகே வந்தது. அங்குள்ள வளைவில் காரை ரோஷன் திருப்ப முயன்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    ரோட்டோரம் உள்ள தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு கார் தோட்டத்துக்குள் புகுந்தது. தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள பெரிய கிணறு உள்ளது. 40 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி கிடக்கும் அந்த கிணற்றுக்குள் வேகமாக வந்த கார் பாய்ந்தது.

    ரோஷன் கார் ஓட்டி வந்ததால் அவர் மட்டும் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஆனால் மற்ற 3 பேரால் காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. ஆதர்ஸ், ரவி, நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி பலியானார்கள்.

    தப்பித்து வெளியே வந்த ரோஷன் நடந்த சம்பவத்தை அந்த பகுதியினரிடம் தெரிவித்து உதவி கேட்டார். கிணறு பாழடைந்து தண்ணீர் நிரம்பி கிடந்ததால் யாராலும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. மேலும் காரும் தண்ணீரில் ஆழமாக மூழ்கி கிடந்தது.

    இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

    ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதலில் ரவி கிருஷ்ணனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 2-வதாக ஆதர்சின் உடல் மீட்கப்பட்டது. நந்தனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. மீட்கப்பட்ட உடல்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிகாலையில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் பலியான நந்தனன் குத்துச்சண்டை வீரர் ஆவார்.

    • மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 3 பேர் மாணவர்கள் மற்றும் 2 பேர் மாணவிகள் ஆவார்கள்.

    மெக்சிகோ:

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பொதுமக்களை குருவிகளை சுடுவது போல மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வருகிறது. இதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்கும்.

    மெக்சிகோ நாட்டிலும் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் 5 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 3 பேர் மாணவர்கள் மற்றும் 2 பேர் மாணவிகள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட உயர்நிலை பள்ளி மாணவ-மாணவிகள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களை மெக்சிகோ போலீசார் தேடி வருகிறார்கள்.

    பள்ளி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    ×