search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"

    • மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

    ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

    அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
    • முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,

    * புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு 2ம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.

    * நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

    * ப்ரீ கேஜிக்கு 3 வயதும், எல்கேஜிக்கு 4 வயதும், யுகேஜிக்கு 5 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

    * முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

    • சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    • மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    சிவகங்கை

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டு அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் சேர 12-ம் வகுப்பு கல்வி தேர்ச்சி பெற்ற அனைவரும் www.tncuicm.com என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ .20 ஆயிரத்து 750 ஆகும்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி காலம் ஒரு ஆண்டு ஆகும்.மேற்படி பயிற்சிக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம்.

    மேற்கண்ட முறையில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணத்தை 30.11.2023-ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் இவர்கள் சிவ கங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நிரப்பப்பட உள்ள காலிப்பணியி டங்களுக்கு www.drbsvg.net என்ற இணையதளத்தில் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக் குள் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளர்.

    • கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள், பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபகணேஷ், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை முதல் சேர்க்கை நடைபெறகிறது.
    • காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.

    அரூர்,  

    அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    2023-24-ம் கல்வி–யாண்டின் முதுநிலை கலை பாடப் பிரிவுகளுக்கு அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை (7-ந் தேதி) முதல் சேர்க்கை நடைபெறகிறது.

    எனவே, இணையதள வழியே விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலைப் பாடப் பிரிவுகளின் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் (அசல் மற்றும் நகல்-2 பிரதிகளில்) நாளை காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள். இதற்காக கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • 9, 10-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
    • அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளி நடைபெறு கிறது. இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கை என்பது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாண விகளின் கல்வித் திறன் அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளிக்கு அனுமதிக்கப் படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 11,12 ஆகிய வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

    9,10-ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9,10 ஆகிய வகுப்புகளின் படித்து சிறப்பும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 80 பேர் தேர்வு செய்யப்பட்டு இது குறித்து அந்த மாணவர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்க ளுடன் பள்ளிக்கு வந்து விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்க ளிடம் கொடுத்தனர்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ரவி கூறியதாவது:-

    கல்வி வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்க ளின் விருப்பத்திற் கேற்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப் பட்டு அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி யாக அனைத்து வசதிகளும் வழங்கி கல்வி கற்பிக்கப்ப டுகின்றன.

    நடப்பா ண்டில் கூடுதலாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொ டங்க உள்ளது. மாணவ, மாணவி கள் சிறந்த முறையில் பயி ன்று உயர்கல்வி படிப்புக்கான அரசு தேர்வு களில் அதிக மதி ப்பெண் பெற்று மருத்து வம், பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
    • மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை மறு நாள் 23-ம் தேதி இளம் நிலை வகுப்புகளுக்கு உள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கவுள்ளது.

    இதுகுறித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கண்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அரசு கலைக் கல்லூரி யில் 2023-2024-ம் கல்வி யாண்டில் இளம்நிலை பாடப்பிரிவுகளில் காலி யாக உள்ள சில சேர்க்கை இடங்களுக்கு, வரும் 23-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைப்பெற உள்ளது.

    எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்க பெறாத மாணவ, மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

    சேர்க்கைக்கு வரும் போது விண்ணப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.

    மேலும், கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.2 ஆயிரத்து 980, அறிவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.3,000, பி.காம்(சிஏ), பி.எஸ்சி, கணினி அறிவியல், பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 100 எடுத்து வர வேண்டும்.

    அதேப்போல, மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு காலியாக உள்ள தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்த்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனத்துடன் இணைந்து உயர்ரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவ னங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகை யுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    • மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,  

    ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-24-ம் ஆண்டு காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

    ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்களுக்கு 100 சதவீதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

    எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.
    • ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர்சாந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கை 31.7.2023 வரை நடைபெறவுள்ளது.

    இதில் 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

    8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவில் கம்பியாள் (2வருடம்) பற்றவைப்பவர் (1வருடம்) இருக்க வேண்டும்.

    கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்) கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம். 2021ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம்.

    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, இ.மெயில் ஐடி மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50- மட்டும் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.

    பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.

    ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

    எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×