search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மவுசு"

    • விளாச்சேரி பொம்மைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்
    • கொல்கத்தா காளி சிலைகளுக்கு ‘மவுசு’ அதிகரித்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு தொழிலாளர்கள் உள்ளனர். சிறிய அளவிலான சிலைகளில் இருந்து மிகப்பெரிய அளவிலான சிலைகள் வரை செய்து விற்பனை செய்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது பல்வேறு விதமான கொலு பொம்மைகள், புதிய சாமி சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளையும் விற்பனை செய்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பொம்மை விற்பனையாளர்கள் வந்து வாங்கி செல்கின்றனர். மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேரடியாக இந்த பகுதிக்கு வந்து பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

    தற்போது பள்ளி, கல்லூரிகள், பொதுநல அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன. அதனால் பொம்மை தேவை அதிகரித்துள்ளதுடன், வித்தியாசமான பொம்மை களையும் எதிர்ப்பார்க் கின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு விற்பனையை அதிகரிப்பதற்காக விளாச்சேரியில் உள்ள தொழிலாளர்கள் கொல்கத்தாவில் இருந்து கொல்கத்தா காளி சிலைகள், விநாயகர் சிலைகள், சிறிய அளவிலான காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சிலைகளையும் வாங்கி வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    கொல்கத்தா சிலை களுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு உள்ளதாக தொழிலா ளர்கள் தெரி விக்கின்றனர். இதுகுறித்து விளாச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற பொம்மை தொழிலாளி கூறியதாவது:-

    விளாச்சேரியில் செய்யப்படும் பொம்மைகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் பலரும் கடைகள் வைத்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது வாடிக்கையாளர்கள் புது விதமான பொம்மைகளை எதிர்பார்க்கின்றனர்.

    அதனை கருத்தில் கொண்டு நாங்களும் புது விதமான பொம்மைகளை தயாரிக்கிறோம். இருப்பி னும் பொம்மைகளின் தேவை அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறோம்.

    அந்த வகையில் கொல்கத்தா சிலைகளை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ரூ.35 முதல் ரூ.2500 வரையான சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர துளசி மாடம், வாஸ்து பானைகள், மண்ணால் செய்யப்பட்ட அலங்கார கைவினைப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×