search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை பெய்யும்"

    • நாமக்கல் மாவட்டத்தில் இன்று 14 மில்லி மீட்டர் மழை பெய்யும், நாளை (15-ந் தேதி) 6 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று 14 மில்லி மீட்டர் மழை பெய்யும், நாளை (15-ந் தேதி) 6 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று முதல் 18-ந் தேதி வரை பகல் நேரம் வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 18 முதல் 20 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும்.

    வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று 40 முதல் 90% ஈரப்பதத்துடன் காணப்படும். கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக் கில் இருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    கோழிப்பண்ணையாளர்களுக்கு ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு ரத்த கழிச்சல் மற்றும் குடற்புண் நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோழி தீவனத்தில் கருவாடு, மீன், கோதுமை போன்ற பொருட்களின் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நாட்டு கோழிகளுக்கு குடற்புண் நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தீவனத்தை பரிசோதனைக்கு பின் பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×