search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லைய சுவாமி ஜீவசமாதி"

    • மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
    • மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது.

    பொன்னேரி:

    காரனோடை அருகே ஸ்ரீ ஸ்ரீ மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி வந்த மல்லைய சுவாமிகள் மண்ணை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    கடைசியாக அவர் இறப்பதற்கு ஒன்பது நாளைக்கு முன்பாக தான் ஜீவசமாதி அடையப்போவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து மல்லைய சுவாமிக்கு பொதுமக்கள் காரனோடை கொசஸ்தலை ஆற்றின் அருகில் ஜீவசமாதி அமைத்து வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் குருபூஜை நாள் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு வந்தால் மன அமைதி ஏற்படுவதாகவும், செல்வம் பெருகும். தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு மல்லைய சுவாமிகள் ஜீவசமாதி கருவறை அருகில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சென்றது. அது அங்கு நின்றபடி படம் எடுத்து ஆடியது.

    இதனை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள், பரவசமடைந்து வணங்கினர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோயில் ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் இயற்கை ஆர்வலரான இளம்பெண் ஹரிணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் விட்டார்.

    ×