search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைச்சாலை ஆய்வு"

    கண்ணகி கோவிலுக்கு மலைச்சாலை அமைக்க வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன்செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது சிதிலமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்திரைமுழுநிலவு அன்று தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இக்கோவிலுக்கு கேரளமாநிலம் குமுளி வழியாக ஜீப்பில் செல்ல பாதை உள்ளது. தமிழக வனப்பகுதி வழியாக செல்ல பளியங்குடி அடிவாரத்தில் இருந்து நடைபாதை உள்ளது. இந்த பாதையில் வாகனங்கள் செல்ல சாலை வசதி செய்து தரவேண்டும் என தமிழக பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளுக்காக ரூ.1 கோடி ஒதுக்கினார். இதனைதொடர்ந்து தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க சர்வே பணிகள் தொடங்கியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வார்டன் ஆனந்த், தேனி மாவட்ட வனஅலுவலர் வித்யா, வனச்சரகர் அருண்குமார், உத்தமபாளையம் தாலுகா நில அளவையர்கள் கார்த்திக், சுரேஷ், கூடலூர் தெற்கு நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வருவாய்த்துறை நிலம், வனத்துறை நிலம் எவ்வளவு கையகப்படுத்த வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    தமிழக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சாலைப்பணிகள் தொடங்கி உள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    ×