search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம கார்"

    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    • மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை தொடங்கி நகர சாலைகள் வரை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி இந்த அதிரடி சோதனையை நடத்துகிறார்கள்.

    இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சொகுசு கார் ஒன்று கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அந்த காரை எடுக்காத நிலையில் வாகனத்திற்கான பதிவு எண் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருப்பதால் சந்தேகம் வலுத்தது.

    அதன் அடிப்படையில் முதற்கட்டமாக காவல்துறையினர் 4 நாட்களாக நின்று கொண்டிருந்த காரை தீவிர விசாரணை செய்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர்கள் மூலமாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில் 4 நாட்களாக மர்ம கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பத்தூர் அருகே கண்ணாடி உடைந்த நிலையில் நின்ற மர்ம கார்
    • ரத்தக்கறை படிந்திருந்ததால் பரபரப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை கொரட்டி கிராமம் மெயின் ரோட்டில் கேரள மாநில பதிவு எண் கொண்ட சிவப்பு நிற கார் ஒன்று கண்ணாடி உடைக்கப்பட்டு சீட்டுகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் மஞ்சள் பொடி தூவியும் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. காரை கண்ட அப்பகுதி மக்கள்

    திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையில் அங்கு காரில் இருந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோடங்காடு சேர்ந்த

    சாகீர்ஹுசைன் (வயது41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர விசாரணையில் சகீர்ஹுசைன் தனது நண்பர் பஷீர் என்பவரை துபாய் செல்ல அவரது காரில் பெங்களூர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தபோது சேலம் அருகே எனது காரை குறுக்கே நிறுத்தி

    என்னை யாரோ கடத்தி அவர்களது காரில் என்னை ஏற்றி கொண்டு அந்த காரில் வந்தவர்கள் எனது காரை ஓட்டிக் கொண்டு வந்து கொரட்டி பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் விட்டுச் சென்றனர்.

    பின்னர் ஆட்டோ ஏறி இங்கு வந்தேன் என்றார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு காரை பறிமுதல் செய்து சேலம் மற்றும் கேரள மாநில மலப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    காரில் வந்த சகீர்ஹுசைன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் போலீசார் கேட்கும் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் அவரால் கூற முடியவில்லை என்னை கடத்திய நபர்கள் யார் என தெரியவில்லை என்றும் கூறி உண்மையை மறைக்கிறார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    மேலும் சாகீர்ஹுசேன் டி சர்டில் ரத்தக்கறை உள்ளதால் போலீசருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சகிர்ஹுசைன் யாரையாவது கொலை செய்துவிட்டு வந்தாரா?

    திருவண்ணாமலை மற்றும் ஏ.டி.எம். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரா இருக்குமோ? அல்லது தங்கம், ஹெராயின், கோக்கைன், போதைப் பொருட்களை கடத்தி வரும்போது இவரை வழிமடக்கி மர்ம நபர்கள் கார் சீட்டில் பதுக்கி வைத்திருந்த மர்ம பொருட்களை கிழித்து எடுத்துச் சென்று மஞ்சள் பொடியை தூவி மோப்ப நாய்கள் மோப்பம் பிடிக்காமல் இருக்க தூவி சென்று இருக்கலாம் என தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    ×