search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர் சார்லஸ்"

    • ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் தரையில் அமர்ந்ததில்லை.
    • மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் ஏராளமான சீக்கியர்கள் வசித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்து வாழ் சீக்கியர்கள், லண்டனை அடுத்த லூடனில் புதிதாக சீக்கிய குருத்துவாரா ஒன்றை கட்டினர். இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.

    இதில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவுக்கு இங்கிலாந்தின்புதிய மன்னர் சார்லசும் அழைக்கப்பட்டிருந்தார்.

    சீக்கியர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்னர் சார்லஸ், புதிய குருத்துவாராவுக்கு சென்றார். அங்கு நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். அப்போது குருத்துவாராவில் சீக்கியர்கள் கடைபிடிக்கும் மரபுபடி மன்னர் சார்லசும் தரையில் அமர்ந்தார். எல்லோரையும் போல அவரும் தரையில் அமர்ந்தபடி பிரார்த்தனையில் பங்கேற்றார்.

    இங்கிலாந்து மன்னர் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்தது இங்கிலாந்து மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மறைந்த ராணி, சீக்கியர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

    ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் தரையில் அமர்ந்ததில்லை. இப்போது மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கது என்றார்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ், லூடன் குருத்துவாராவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். பின்னர் அங்கிருந்த இசைக்கருவிகளையும் பார்வையிட்டார்.

    சீக்கிய குழந்தைகளுடனும் அவர் உரையாடினார். குழந்தைகளிடம் இசை கருவிகளை இசைக்க கேட்டு அதனை ரசிக்கவும் செய்தார்.

    • பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமர்வார்.
    • இதன் பிறகு மன்னர் சார்லஸ் ஆட்சி அதிகாரப் பூர்வமாக தொடங்கும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா 6 மே 2023 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவியும் ராணியுமான கமீலா பார்கருடன் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்வார்.

    பிறகு, மூத்த மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார். இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். 74 வயதாகும் சார்லஸ் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும்.
    • மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ம் தேதி தனது மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

    இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்.இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே, மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • “என் அன்பான அம்மா” உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

    லண்டன்

    இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

    ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ் (வயது 73) மன்னர் ஆனார். இங்கிலாந்தின் புதிய மன்னர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.

    மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்களின் இரங்கலுக்கு மன்னர் சார்லஸ் நேற்று பதில் அளித்து பேசினார்.

    அப்போது தனது தாயை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார். மன்னர் தனது உரையில் கூறியதாவது:-

    நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக்கருவி நாடாளுமன்றம்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது போல் ராணி எலிசபெத், வாழும் அனைத்து இளவரசர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரை பின்பற்றி அரசியலமைப்பு நிர்வாகத்தின் விலைமதிப்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்துவேன்.

    "என் அன்பான அம்மா" உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. வெள்ளி விழா நீரூற்று முதல் பழைய அரண்மனை முற்றத்தில் உள்ள சூரியக் கடிகாரம் வரை அவரது பொன்விழாவைக் குறிக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறினார்.

    இங்கிலாந்து மன்னராக நாடாளுமன்றத்தில் சார்லஸ் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணி எலிசபெத்தின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி காலை 6.30 மணி வரை வைக்கப்படுகிறது.

    இதில் அஞ்சலி செலுத்துவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராணி எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் மிக நீண்ட வரிசை காணப்படும். பல மணி நேரத்துக்கு, குறிப்பாக இரவு வரை நீங்கள் வரிசையில் நிற்க நேரிடும். வரிசை தொடர்ந்து நகர்ந்தவாறே இருக்கும் என்பதால், அமர்வதற்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும்.

    ராணியின் உடல் வைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தை சுற்றிலும் சாலைகள் மூடப்படும். இதனால் பொது போக்குவரத்து இல்லாமல் நீண்ட தாமதம் ஏற்படலாம்.

    அஞ்சலி செலுத்த வருவோரிடம் விமான நிலையத்தில் நடைபெறும் பரிசோதனைகள் போல சோதனையிடப்படும். ஒரு திறப்பு வைத்த சிறிய பை ஒன்று மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படும்.

    நீண்ட காத்திருப்பு ஏற்படும் என்பதால் குடை, செல்போன் பவர் பேங்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.

    உணவு, பானங்கள் எடுத்து வரக்கூடாது. மலர்களோ அல்லது மெழுகுவர்த்தி, புகைப்படங்கள் போன்ற பிற பொருட்களையும் அஞ்சலிக்கு கொண்டு வரக்கூடாது.

    இந்த நிகழ்வின் கண்ணியத்தை மதித்து சரியான முறையில் நடந்து கொள்ளவும், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் அமைதியாக இருக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதைத்தவிர அங்கு 'செல்பி', புகைப்படம், வீடியோ பதிவு போன்றவற்றுக்கு தடை விதித்திருப்பதுடன், பட்டாசு, லேசர் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

    • ராணி எலிசபெத் மகன் சார்லஸ் நாளை அந்நாட்டின் மன்னராக அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார்.
    • வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன் என இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார் என தகவல் வெளியானது.

    மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.

    இங்கிலாந்து அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் நாளை அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிடுகிறது.

    இந்நிலையில், நாட்டு மக்களிடம் மன்னராக பதவியேற்க உள்ள சார்லஸ் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

    அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் என தெரிவித்தார்.

    ×