search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியிடம் விசாரணை"

    • உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக கூறினர்.
    • செந்தில்குமாரின் மனைவியான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து புகாருக்குள்ளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இவர் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து செந்தில்குமாரின் தாயார் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமார் (19), பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ் (37) ஆகிய 2 பேரின் செல்போன்களும், செந்தில்குமாரின் செல்போனும் ஒரே இடத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் கடந்த 13-ந்தேதி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் அவர்கள் 2 பேரும், செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசியதாக கூறி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதனிடையே போலீஸ் ஏட்டு கொலை தொடர்பாக சிறையில் இருந்த ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் ஊத்தங்கரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏட்டு செந்தில்குமாரை அவர்கள் 2 பேரும் கொலை செய்து உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியதாக கூறினர்.

    இதையடுத்து நேற்று போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் இருந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் செந்தில்குமாரின் மனைவியான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகுமென்று தெரிகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் மாயமானதாக புகார் தரப்பட்ட நிலையில் 100 நாட்களுக்குப்பிறகு போலீஸ் ஏட்டு உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×