search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரைஅணி சாம்பியன்"

    • கமுதியில் நடந்த தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரி மைதானத்தில் கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் தென்மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.

    இதில் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட 24 மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதி போட்டியில் மதுரை என்.ஏ.சி.சி. அணியை வீழ்த்தி மதுரை வேலவன் கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முதலிடம் பெற்ற இந்த அணிக்கு ரூ.50ஆயிரம், பசும்பொன் ஊராட்சிமன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் வேலவன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் போஸ் செல்லப்பா ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

    2-ம் இடம் பெற்ற மதுரை என்.ஏ.சி.சி. அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை, கோட்டை மேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் வழங்கப் பட்டது. 3-ம் இடம் பெற்ற கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகை, நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் முருகன், வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சிரஞ்சீவி ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டது.

    4-ம் இடம் பிடித்த திருப்பூரை சேர்ந்த 22யார்ட்ஸ் கார்மெண்ட்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசு தொகை, முன்னாள் வடக்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் நேதாஜி சரவணன் சார்பில் வழங்கப்பட்டது.

    முதல் 4 இடம் பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. அவைகள் முன்னாள் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் ராமையா சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழங்கினார்.

    இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோட்டைமேடு நண்பர்கள் கிரிக்கெட் கிளப் தலைவர் காளிமுத்து மற்றும் பலர் செய்திருந்தனர்.

    தென் மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நடத்திய கோட்டைமேடு நண்பர்கள் அணியை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    ×