search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமேல்குடி கடற்கரை"

    • படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது.
    • 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.

    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த படகு இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த படகில் வந்த மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பதிவு இல்லாமல் வசித்து வரும் சிந்துஜன் (வயது 28) என்பவர் இலங்கைக்கு சென்று அங்கிருந்து இலங்கை அலைதீவை சேர்ந்த விந்துசன் என்கின்ற துசன் (21), லிங்கேஸ்வரன் (25) ஆகியோரை பைபர் படகு மூலம் மணமேல்குடி கோடியக்கரைக்கு அழைத்து வந்து அங்கிருந்து பஸ் மூலம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர்.
    • இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் என உறுதி செய்யப்பட்டது. அந்த படகின் உள்ளே 2 டீசல் கேன், தண்ணீர் பாட்டில், இலங்கை தின்பண்டங்கள் ஆகியவை இருந்தன.

    இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைபர் படகில் 2 டீசல் கேன் இருந்ததால் மணமேல்குடி கோடியக்கரை வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இணைந்து சென்னை அல்லது கன்னியாகுமரி செல்ல முடியும். இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கோடியக்கரை வழியாக செல்லும் சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் வந்தனரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×