search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சுயஉதவி குழுக்கள்"

    • கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000- வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
    • மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை மேற்காண் சான்றிதழ்களுடன் மாற்றுத்தினாளிகள் நலவாரிய அட்டை மற்றும் UDID சமர்ப்பித்து கடன் பெறலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் டாப்செட்கோ, டாம்கோ, தாட்கோ, சுய உதவி குழு கடன்கள், மாற்றுத்திறனாளிகள் கடன்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் வழங்கப்படுகிறது என மண்டல இணைப்பதிவாளா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் தருமபுரி மண்டல இணைப்பதிவாளர் சந்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

    தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 21 கிளைகள். 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 மலைவாழ் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மற்றும் தருமபுரி கூட்டுறவு வங்கி மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாப்செட்கோ), (தாட்கோ), கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்கிட (டாம்கோ-VIRASAT) சுய உதவி குழுக்களுடன் போன்ற கடன்களுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.10.00 இலட்சம் வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக தனிநபர் ஒருவருக்கு (அடமானத்தின் பேரில் ) ரூ.50.00 இலட்சம் வரையிலும் சுய உதவி குழு ஓன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000- வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட கடன் கோரும் பயனாளிகள், ஆதார், குடும்ப அட்டை நகல், வருமான சான்று, பிறப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், தொழிலாளி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை மேற்காண் சான்றிதழ்களுடன் மாற்றுத்தினாளிகள் நலவாரிய அட்டை மற்றும் UDID சமர்ப்பித்து கடன் பெறலாம்.

    இக்கடன்கள் பெறுவது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 21 கிளைகள் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் கூடுதல் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்-9489094166 உதவி பொது மேலாளர் -9489906009 மற்றும் மேலாளர்-9489094152 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×