search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகர நெடுங்குழைக்காதர்"

    • இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும்.

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கொடியேற்றம்

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப் பேரை வீதிகளில் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவர் ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கொடி பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து கொடி மரத்தில் கொடி பட்டத்தை அர்ச்சகர் காலை 7.15 மணிக்கு ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீரிதேவி, பூதேவி நாச்சி யார்களுடன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனத்தில் முக்கிய மாட வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    கருடசேவை

    9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும்,

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் பக்தர் களுக்கு காட்சி அளிக்கிறார்.

    12-ந் தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது.

    தேரோட்டம்

    13-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 8 மணிக்கு தாமிர பரணி நதியில் தீர்த்த வாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக் கோலமும், வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜீத் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கைங்கர்ய சபா நிர்வாகிகள், சீனி வாசன் சேவைகள் அறக் கட்டளை முருகன், சடகோபன், பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரி துரைசாமி, பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் குமரேசன், ரேவதி, ராஜப்பா வெங்கடாச்சாரி, வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தினர், மற்றும் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    ×