search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் தர்மஅடி"

    திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு தர்மஅடி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடன் சுற்றினர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி(45). இவர் இன்று தனது வீட்டுமுன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரிடம் விலாசம் கேட்பது போல பேச்சு ெகாடுத்தனர். பின்னர் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

    விஜயலட்சுமி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் நகையையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட கொள்ளையர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

     மேலும் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் விதவிதமான நம்பர் பிளேட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் படுகாயத்துடன் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வெவ்ேவறு பகுதிகளுக்கு சென்று திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் போது போலீசாரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் விதவிதமான நம்பர் பிேளட்டுகளை மாற்றிக்கொண்டு அவர்கள் கைவரிசை காட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தெலுங்கானா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்து கொள்வதுடன் அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பதையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×