search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் ரேஸ் வீரர்கள்"

    • தரிசு நிலத்தில் சுமார் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு களம் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
    • 3-ம் சுற்று போட்டியில் அப்துல் வாஹித் என்பவர் ஓவரால் வின்னர் பட்டத்தை தட்டி ச்சென்றார்.

    பல்லடம்:

    காட் ஸ்பீட் நிறுவனத்தின் சார்பில் 2023ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்(பைக் ரேஸ்) போட்டிகள் 5 சுற்றுகளாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முதல் சுற்று போட்டி மங்களூரிலும், 2-ம் சுற்று போட்டி சிக் மங்களூரிலும் நடைபெற்று முடிந்த நிலையில் 3-ம் சுற்று போட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.

    இப்போட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் எந்தவித தொந்தரவும் ஏற்படுத்தாமல் முறையாக அனைத்து போக்குவரத்து விதிகளையும் பின்பற்றி தரிசு நிலத்தில் சுமார் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு களம் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    இந்தியா முழுவதும் உள்ள முன்னணி வாகன நிறுவனங்களில் இருந்து 110 பைக் ரேஸ் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சவுமியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தரிசு நிலத்தில் முறையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரு நிமிட இடைவெளியில் ஒவ்வொரு பைக் ரேஸ் வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். 66 கிலோ மீட்டர் தூரத்தை 56 நிமிடங்களில் கடந்து 3-ம் சுற்று போட்டியில் அப்துல் வாஹித் என்பவர் ஓவரால் வின்னர் பட்டத்தை தட்டி ச்சென்றார்.

    தொடர்ச்சியாக 4-வது சுற்று போட்டி பூனேவிலும், 5-ம் சுற்று போட்டி நாசிக் நகரிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெறும் பைக் ரேஸ் வீரர் தேசிய சாம்பி யன்ஷிப் பட்டத்தை வெல்வார் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    ×