search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேளூர்"

    சேலம் மாவட்டம் அருகே பேளூரில் புதியதாக புறகாவல் நிலையம் திறக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேளூரில் பேருந்து நிலையம் அருகில் சிறிய அளவில் புறக்காவல் மையம் செயல்பட்டு வந்தது.

    பேளூரில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கவும், நகர்ப்புற கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, பொதுமக்கள் ஒத்துழைப்போடு பேளூர் பேருந்து நிலையம் அருகே புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது.

    இதுமட்டுமின்றி புறக்காவல் மையத்திலிருந்து பேரூராட்சி முழுவதையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டது. காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி தலைமை வகித்தார். உதவி காவல் ஆய்வாளர் கோபால் வரவேற்றார். பேளூர் பேரூராட்சி மன்ற தலைவி ஜெயசெல்வி பாலாஜி புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×