search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சிக்கு கோரிக்கை"

    • மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.
    • பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இரணியல் :

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறியில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. சுமார் 2 அடி உயரம் வரை தேங்கி நின்ற வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்தபடி சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலை அடிப்பகுதி வழியாக கட்டப்பாட்டு உள்ள அடிமடை வழியாக வெள்ளம் மறுபக்கம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் இழுத்து சென்றதில் இந்த அடிமடையில் சிக்கிதான் தாயுடன் வந்த 7 வயது மாணவன் ஆஷிக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது:-

    மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மழைநீர் ஓடையில் மூடப்பட்டுள்ள இரும்பு கிரில்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் சிக்கி வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதும், கடைகளுக்குள் தண்ணீர் புகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவனின் சிகிச்சை செலவு மற்றும் இழப்பீடுகளை பேரூர் நிர்வாகம் வழங்க வேண்டும். அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் கண்டன போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றனர்.

    ×