search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாறு அணை குறித்து மீண்டும் விஷம பிரசாரம்"

    • கேரளாவில் தன்னார்வலர்கள், சமூகசெயல்பாட்டாளர் என்ற போர்வையில் பலர் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கல்லூரி மாணவர்களிடம் பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் பரபரப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் தன்னார்வலர்கள், சமூகசெயல்பாட்டாளர் என்ற போர்வையில் பலர் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சியினரையும் தாண்டி இவர்கள் பெரியாறு அணை குறித்து பல்வேறு குறும்படங்கள் தயாரித்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.

    இதற்கு கேரள மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களிடமும் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களிடம் பெரியாறு அணை குறித்து விஷம பிரசாரம் பரபரப்பட்டு வருகிறது. கேரளமாநிலம் அங்கமாலி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த 22-ந்தேதி முதல் 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் அணை குறித்து வக்கீல் ரசல்ஜோ என்பவர் தவறான தகவல்களை மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

    பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த அணை உடைந்தால் இடுக்கி அணையும் உடையும். அப்போது இப்பகுதி மக்கள் ஒருவர்கூட பிழைக்கமுடியாது. எனவே அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரசாரங்களை மேலும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கஒருங்கிணை்பபாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பலமுறை ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் தொடர்ந்து பொய்பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கேரள அரசும் இதுபோன்ற நபர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

    இதனால் இருமாநில மக்களிடையே பதட்டமான போக்கு ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களிடம் பொய்யான பிரசாரங்களை செய்து வரும் ரசல்ஜோய் மற்றும் அவருடைய கூட்டாளிகளை மத்திய உளவுத்துறை கண்காணித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×