search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயர் மாற்றம்"

    • அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
    • மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

    அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.

    இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடைபெறும்
    • இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வர வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். ஆர். பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் இணைப்பின் உரிமையாளர் தங்களது மின் இணைப்பினை தங்களது பெயரில் மாற்றம் செய்யாமல் அனுபவித்து வரும் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 46 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள தேவைப்படும் நுகர்வோர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர், ஆவண நகல்களுடன் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர் கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-

    கிரையம், பாகப்பிரிவினை, சமரசம், நன்கொடை மூலம் உரிமை கிடைக்க பெற்ற மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய தற்போதைய வரி ரசீது (உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி) உறுதிமொழி படிவம் 4, படிவம் 2, பெயர் மாற்றம் பெற பழைய உரிமையாளரின் ஒப்புதல் (படிவம்2) வழங்கப்படாத பட்சத்தில் வைப்பு தொகை பெற்று பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    வாரிசுதாரர்களால் பயன் பெற்று வரும் மின் இணைப்புகளுக்கு வாரிசுதாரரின் பெயரில் உள்ள தற்போதைய வரி ரசீது, வாரிசு சான்றிதழ், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் அல்லது படிவம் 3 வழங்க வேண்டும்.

    மின் இணைப்பின் பெயரில் உள்ளவரின் வாரிசுகள் அனைவரின் பெயரிலும் சேர்த்து பெயர் மாற்றம் செய்திட வாரிசு சான்றுடன் இணைய தளம் வழி விண்ணப்பம் பதிவு செய்து, அதன் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவும். எவ்வித வகைகளில் தாங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது என் பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலான ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் பதிவு செய்து, அதற்குண்டான கட்டணம் செலுத்தியவுடன் 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகா மில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் நகல்கள் ஒப்படைத்த ஒரு சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடை பெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவும். தாங்கள் பதிவு செய்யும் ஆவணங்களின் அடிப்ப டையில் பெயர் மாற்றம் செய்வதால், பதிவு செய்த ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் மறு அறிவிப்பின்றி பெயர் மாற்றம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பட்டணம் ரோடு சாமுண்டி தியேட்டர் பின்புறம் உள்ள ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம் மின் கோட்ட மின்வாரிய செயற்–பொறியாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். நகர தி.மு.க செயலாளர் என்.ஆர்.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாமக்கல் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் முகாமில் கலந்து கொண்டு 95 மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்து உத்தரவு வழங்கினார்.

    மீதமுள்ள மின் நுகர்–வோர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு நடப்பில் வைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மின் நுகர்–வோர்கள் விரைவாக பெயர் மாற்றம் செய்து தந்த மின்வாரிய அலுவலர்களை பாராட்டினர். முகாமிற்கான ஏற்பாடு–களை ராசிபுரம் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்–பொறியாளர்கள் மோகன்ராஜ், வெங்கடா–சலம், ரவி, ராமராஜ் மற்றும் பிரிவு அலுவலர்கள், பணியா–ளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpayee
    ராய்ப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது  உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. 

    இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. 
    ×