search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள்நாளை தொடங்குகிறது
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள்நாளை தொடங்குகிறது

    • 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடைபெறும்
    • இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வர வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். ஆர். பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் இணைப்பின் உரிமையாளர் தங்களது மின் இணைப்பினை தங்களது பெயரில் மாற்றம் செய்யாமல் அனுபவித்து வரும் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 46 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள தேவைப்படும் நுகர்வோர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர், ஆவண நகல்களுடன் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர் கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-

    கிரையம், பாகப்பிரிவினை, சமரசம், நன்கொடை மூலம் உரிமை கிடைக்க பெற்ற மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய தற்போதைய வரி ரசீது (உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி) உறுதிமொழி படிவம் 4, படிவம் 2, பெயர் மாற்றம் பெற பழைய உரிமையாளரின் ஒப்புதல் (படிவம்2) வழங்கப்படாத பட்சத்தில் வைப்பு தொகை பெற்று பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    வாரிசுதாரர்களால் பயன் பெற்று வரும் மின் இணைப்புகளுக்கு வாரிசுதாரரின் பெயரில் உள்ள தற்போதைய வரி ரசீது, வாரிசு சான்றிதழ், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் அல்லது படிவம் 3 வழங்க வேண்டும்.

    மின் இணைப்பின் பெயரில் உள்ளவரின் வாரிசுகள் அனைவரின் பெயரிலும் சேர்த்து பெயர் மாற்றம் செய்திட வாரிசு சான்றுடன் இணைய தளம் வழி விண்ணப்பம் பதிவு செய்து, அதன் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவும். எவ்வித வகைகளில் தாங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது என் பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலான ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் பதிவு செய்து, அதற்குண்டான கட்டணம் செலுத்தியவுடன் 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகா மில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் நகல்கள் ஒப்படைத்த ஒரு சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.

    பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடை பெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவும். தாங்கள் பதிவு செய்யும் ஆவணங்களின் அடிப்ப டையில் பெயர் மாற்றம் செய்வதால், பதிவு செய்த ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் மறு அறிவிப்பின்றி பெயர் மாற்றம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×