search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கிரிக்கெட்"

    பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து, தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. #ENGWvSLW
    இங்கிலாந்து - இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கிடைசி போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

    அதன்பின் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 96 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தல் இலங்கையை வீழ்த்தி 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து.

    இங்கிலாந்து பெண்கள் அணி இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தது. அதன்பின் 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றது.

    இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை முற்றிலுமாக வென்றதால் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
    வீராங்கனைகள் கோஸ்வாமி, பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #INDWvENGW
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்ற இங்கிலாந்து அணி 161 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஸ்கிவர் அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார்.



    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ரோட்ரிக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 63 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தார். பூனம் ரவுத் 32 ரன்களும், கேப்டன் மிதலி ராஜ் 47 ரன்களும் சேர்க்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
    9 வீராங்கனைகள் டக்அவுட்டில் வெளியாக மத்திய பிரதேசம் அணிக்கெதிராக மிசோரம் பெண்கள் அணி 9 ரன்னில் சுருண்டது. #T20Cricket
    பெண்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் ஆட்டம் ஒன்றில் மத்திய பிரதேசம் - மிசோரம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மிசோரம் 13.5 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதில் 9 வீராங்கனைகள் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள்.

    5-வது வீராங்கனையான களம் இறங்கிய அபூர்வா பரத்வாஜ் அதிகபட்சமாக 25 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் சேர்த்தார். மூன்று ரன்கள் உதிரியாக கிடைத்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தராங் ஜா என்ற வீராங்கனை நான்கு ஓவர்கள் வீசி இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் மத்திய பிரதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன் கேரளாவிற்கு எதிராக மிசோரம் 24 ரன்கள் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி 10 ரன்னில் சுருண்டது.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டமொன்றில், தெற்கு ஆஸ்திரேலியன் - நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் தெற்கு ஆஸ்திரேலியன் அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனை வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை பெபி மான்செல் மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.

    இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தவிர மற்ற வீராங்கனைகள் டக்அவுட்டில் வெளியேறினார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

    ரோக்சனா 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஸ்மிரிதி மந்தனா அதிவேக அரைசதம் அடித்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்தியா. #ZNWvINDW
    நியூசிலாந்து - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீராங்கனை சோபி டிவைன் 48 பந்தில் 62 ரன்கள் விளாச 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். பிரியா புனியா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். பிரியா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து மந்தனா உடன் ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரி மந்தனா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தனா 24 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.


    மந்தனா

    இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 102 ரன்னாக இருக்கும்போது மந்தனா 34 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 103 ரன்னாக இருக்கும்போது ரோட்ரிக்ஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிக்க இந்திய பெண்கள் அணி 136 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. #NZWvINDW
    ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணிகளும் மற்ற நாடுகளில் சென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். அதன்படி தற்போது இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 161 ரன்னில் சுருண்டது.

    கோஸ்வாமி 3 விக்கெட்டும், ஏக்தா பிஸ்ட், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெர்மையா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ரோட்ரிக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 8 ரன்னில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனாவுடன் கேப்டன் மிதலி ராஜ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய 35.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஸ்மிரிதி மந்தனா 90 ரன்னுடனும், மிதலி ராஜ் 63 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். #PAKWvWIW
    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான ஸ்டெஃபானி டெய்லர் பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செய்தியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 31-ந்தேதியும், 2-வது போட்டி பிப்ரவரி 1-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி பிப்ரவரி 3-ந்தேதியும் நடக்கிறது. மூன்று ஆட்டங்களும் கராச்சியில் நடைபெற இருக்கிறது.
    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 15 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டி20 தொடரில் விளையாட இருக்கிறது. #PAKWvWIW
    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்று ஆட்டங்களும் கராச்சியில் நடக்கிறது.

    இதன்மூலம் கடந்த 2004-ம் ஆண்டிற்குப்பிறகு வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது.

    இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 31-ந்தேதியும, 2-வது டி20 போட்டி பிப்ரவரி 1-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி பிப்ரவரி 3-ந்தேதியும் நடக்கிறது.
    நியூசிலாந்து பெண்கள் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா சதம் விளாச இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZWvINDW
    நியூசிலாந்து - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் நேப்பியரில் இன்று நடைபெற்றது. இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய வீராங்கனைகளில் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 48.4 ஓவரில் 192 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஏக்தா பிஸ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ஜெர்மையா ரோட்ரிக்கஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


    ரோட்ரிக்ஸ்

    ஸ்மிரிதி மந்தனா 104 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா - ரோட்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. மறுமுனையில் விளையாடிய ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 94 பந்தில் 81 ரன்கள் சேர்க்க இந்திய பெண்கள் அணி 33 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பாங்காங்கில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச டி20 போட்டியில் சீனா 14 ரன்னில் சுருண்டு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. #WomenCricket
    14 அணிகள் இடையிலான பெண்களுக்கான சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் பாங்காங்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (பி பிரிவு) ஐக்கிய அரபு அமீரக அணி, சீனாவுடன் மோதியது.

    முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய அனுபவம் இல்லாத சீனா அணி, அமீரகத்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 14 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 6 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். இதில் இரண்டு எக்ஸ்ட்ரா ரன்னும் அடங்கும்.

    சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இதுதான். அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 189 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி, மிகப்பெரிய வெற்றியாக பதிவானது.
    ×