search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் விமானி"

    பெங்களூரு விமான நிலையத்தில் பணிக்கு போதை மயக்கத்தில் வந்த பெண் விமானிக்கு விமானத்தை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது வழக்கம்போல் விமானிகள், விமான ஊழியர்களிடம் மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை அறியும் மூச்சு பரிசோதனை நடத்தப்பட்டது.

    அப்போது துணை பெண் விமானி ஒருவர் போதை மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. எனவே அவர் விமானம் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். பொதுவாக விமானம் ஓட்டும் முன்பு விமானிகளிடம் 2 தடவை மூச்சு பரிசோதனை நடத்தப்படும். அப்போது அவர்கள் போதை பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் விமானம் ஓட்ட தடை விதிக்கப்படும். அது 3 மாதமாக இருக்கலாம் அல்லது 3 வருடமாக இருக்கலாம்.

    2016-ம் ஆண்டு முதல் இப்பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மதுபோதையில் இருந்த 2 விமானிகளும் 3 விமான ஊழியர்களும் சிக்கினர். இவர்கள் சர்வதேச விமானங்களை ஓட்டும் விமானிகள் ஆவர். தற்போது போதை மயக்கத்தில் இருந்ததாக சிக்கிய பெண் விமானி விமான பணிப்பெண்ணாக இருந்தவர். #tamilnews
    ×